முதல் மனைவியின் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறேன் - இரண்டாம் திருமணம் குறித்து டி.இமான் உருக்கம்..!

D. Imman
1 மாதம் முன்

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்து முதல் முறையாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது பேஸ்புக் பதிவில்,“கடந்த ஞாயிற்றுக்கிறமை, மறைந்த பிரபல கலை இயக்குனர் உப்லாட் என்பவரின் மகள் அமலியை நான் மறுமணம் செய்துள்ளேன்.

முதல் மனைவியின் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறேன் - இரண்டாம் திருமணம் குறித்து டி.இமான் உருக்கம்..! | D Iman Melting About Second Marriage

எனது வாழ்வின் கடினமான தருணங்களிலும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்த எனது தந்தை கிருபாகர தாஸ் அவர்களுக்கு, எப்போதும் கடன்பட்டுள்ளேன்.

இந்த திருமணம், முழுக்க முழுக்கவே குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணம் தான். கடந்த சில வருடங்களாக எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட அனைத்து சவால்களுக்கும் இந்த திருமண ஏற்பாடு முக்கிய தீர்வாக இருக்கும்.

அந்தவகையில், இந்த திருமணத்தை ஏற்பாடு செய்து, அமலியை எனக்கு அறிமுக படுத்திய என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

முதல் மனைவியின் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறேன் - இரண்டாம் திருமணம் குறித்து டி.இமான் உருக்கம்..! | D Iman Melting About Second Marriage

அமலியின் மகளான நேத்ரா, இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பது, அளவிலாத மகிழ்ச்சியை எனக்கு தந்துள்ளது.

எனது இந்த திருமணத்தில், எனது மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெஸிக்காவால் கலந்து கொள்ள முடியாது போயுள்ளது. அவர்களை இத்தருணத்தில் பெரிதும் மிஸ் செய்கிறேன்.

அவர்கள் என்னிடம் விரைவில் வருவதற்காக, பொறுமையுடன் காத்திருக்கிறேன். அவர்கள் இருவருக்கும் நான், என் மனைவி அமலி மற்றும் எங்கள் மகள் நேத்ரா, எங்கள் உறவினர்கள் என அனைவரும் எங்கள் அன்பை கொடுக்க காத்திருக்கிறோம்.

முதல் மனைவியின் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறேன் - இரண்டாம் திருமணம் குறித்து டி.இமான் உருக்கம்..! | D Iman Melting About Second Marriage

அமலியின் மிகப்பெரிய குடும்பத்தினர் என் மீது காட்டிய அளப்பறியா அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன்.

இத்தருணத்தில், எனக்கு ஆதரவுடன் இருக்கும் எனது இசை ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்கவும் விரும்புகிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.    

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.