‘அவள் நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும்...’ - விவாகரத்துக்குப் பின் டி.இமான் உருக்கம்

Divorce interview Music D.Iman விவாகரத்து டி.இமான் Famous composer உருக்கம்
By Nandhini Mar 13, 2022 07:03 AM GMT
Report

பிரபல இசையமைப்பாளரான டி.இமான் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் டி.இமான் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவிப்பு ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த விவாகரத்து அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படம் தொடர்பான பிரத்யேக பேட்டியில், தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து இசையமைப்பாளர் D.இமான் பேசியுள்ளார்.

இமான் பேசுகையில்,

விவாகரத்து என்று பேசும்போது ஆண் சமூகத்தின் மீது தான் அதிகமான குற்றச்சாட்டு எழுகிறது. துரோக்கத்தில் ஆண் என்ன.. பெண் என்ன.. எல்லாம் ஒன்றுதான்.

அதுக்கும், இதுக்கும் சம்பந்தமே படுத்தக்கூடாது. ஒருவிஷயத்தைதாண்டி நாம் கடந்து போகிறோம் என்றால், சில விஷயங்களை நாம் ஓபனாக பேசுவோம், சில விஷயங்களை ஓபனாக பேச மாட்டோம். என் குழந்தைகளை நாம் ரொம்ப நேசிக்கிறேன். அந்த பாசம் ஒருபோதும் குறையாது. நான் இந்த உலகத்தில் என் கடைசி மூச்சு இருக்கும் வரை அது மட்டும் மாறாது.

ஆண்மேல் தான் எல்லாம் தப்பும் இருக்கும் என்ற மனநிலையை இந்த சமூகத்தில் இருப்பவர்கள் மாற்றிக்க வேண்டும். தவறுகள் யாரிடமும் இருக்கலாம். அதை வெளிப்படையாக பேச வேண்டிய அவசியமே கிடையாது. எல்லார் குடும்பத்திலும் ஏதாவது பிரச்சினை இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.

விவாகரத்து என்பது பெரிய விஷயம். அது நிகழக்கூடாதுதான். என் குழந்தைக்கு இது ஆகக்கூடாதுதான் என்று நான் நினைக்கிறேன். தந்தையாக அதை நான் நினைக்கிறேன்.

சில விஷயங்கள் நிகழும்போது, அதற்கு நான் பொறுப்பாளனாக இல்லாமாதிரிதான் பார்த்துக்க முடியும். இதற்கு நான் காரணமா என்று யோசிக்க முடியுமே தவிர, அதைத் தாண்டி இவங்க மேல் குற்றம், அவங்க மேல் குற்றம் என்ற பாயிண்டுக்கு போக விரும்பவில்லை.

அது தேவையும் இல்லை. என் முன்னாள் மனைவி நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும். அவர்களுக்கு என்ன விருப்பமோ அந்த மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார். 

You May like This