6 சிலிண்டர்கள் மாதம் ரூ.1,500- குடும்ப தலைவிகளை வாக்குகளை குறி வைக்கும் அதிமுக
vote
aiadmk
cylinders
By Jon
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அறிவிக்க இருப்பது முன்கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்து விட்டது.
ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என கூறினர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். சிறப்பான திட்டங்களால் நாங்கள் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளோம்.” என தெரிவித்தார்.
மகளிர் தினத்தை ஒட்டி, அதிமுக தேர்தல் வாக்குறுதியாக ஈபிஎஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.