வர்த்தக சிலிண்டர்கள் விலை மேலும் ரூ.101ஆக உயர்ந்தது - வியாபாரிகள் கலக்கம்
சென்னையில் வர்த்தக கேஸ் சிலிண்டர்களின் விலை 101 ரூபாய் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், இம்மாதம் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உணவகங்கள், கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, வர்த்தக சிலிண்டர் ரூ. 2,234.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2021ம் ஆண்டில் மட்டும் வர்த்தக சிலிண்டர்களின் விலை 770 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றத்தால், உணவக உரிமையாளர்கள் மற்றும் உணவுப்பொருள் சார்ந்த வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், சிலிண்டர்களின் விலையேற்றத்தால், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் தற்போது மக்களிடையே எழுந்துள்ளது.

இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு சிக்கல் : பாதுகாப்புச் செயலாளரின் அதிரடி உத்தரவு IBC Tamil

தமிழர் படுகொலை - காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள் : மறைக்கப்படும் உண்மைகள் IBC Tamil
