என்னது மறுபடியுமா .. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு
ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் , டீசல் ,மற்றும் எரிபொருட்கள் விலை உயர்ந்து வருகிறது , பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை ரூபாய் 250 உயர்த்தப்பட்டது.
இந்நிலையில்,19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்ந்து தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The price of a 19-kg commercial LPG cylinder has been hiked to Rs 2355.50 from Rs 2253; a 5kg LPG cylinder is priced at Rs 655 now.
— ANI (@ANI) May 1, 2022
அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.