சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி நூதன போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

india political town
By Jon Feb 20, 2021 02:16 AM GMT
Report

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது.

இதனால் இந்த ஒரு மாதத்தில் மட்டும் டீசல் பெட்ரோல் விலை 25 மற்றும் 50 என விலை உயர்த்தபட்டதால் சிலிண்டர் விலை ஏற்றப்பட்டதால் தற்போது 785 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எதிர் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி நூதன போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் | Cylinder Gas Protest Alanganallur

அந்த வகையில் மதுரை அலங்காநல்லூர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் அந்த பகுதியில் உள்ள ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினரும் கலந்துகொண்டனர்.

அலங்காநல்லூர் பகுதியில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய நூதன போராட்டம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.