இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல்

Cyclone
By Fathima Nov 02, 2026 03:20 AM GMT
Report

வங்க கடலில் உருவான முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திரா மாநிலத்தில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 31ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மேலும் வலுப்பெற்று முரசு புயலானது.

இந்த புயல் இன்று நள்ளிரவு அதாவது நவம்பர் 3ம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் | Cyclonic Storm Murasu Latest Updates

சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு

சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.