அசாமை புரட்டியெடுத்த சிட்ரங் சூறாவளி - 83 கிராமங்கள் கடும் பாதிப்பு - வைரலாகும் வீடியோ...!

Viral Video Assam
By Nandhini Oct 26, 2022 07:26 AM GMT
Report

அசாமை புரட்டியெடுத்த சிட்ரங் சூறாவளியால், 83 கிராமங்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிட்ரங் சூறாவளி

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சிட்ரங் சூறாவளி புயல் நேற்று முன்தினம் இரவு பரிசால் கடற்கரை பகுதியில் 9.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையை கடந்தது. அப்போது, சிட்ரங் சூறாவளியால் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் கடுமையான காற்று வீசியது.

இதன் வேகம் மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரித்தது. இதனையடுத்து, இந்தியாவின் வங்காளதேச எல்லை மற்றும் இந்தியாவின் அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டது.

இதன் பின்னர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை சிட்ரங் சூறாவளி கடந்து சென்றது. இந்த சூறாவளியால், 83 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மரங்களும், மின் கம்பங்கள், வீடுகள் சாய்ந்து விழுந்தன. சூறாவளியால் ஏற்பட்ட கனமழையை தொடர்ந்து 325.501 ஹெக்டேர் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

cyclone-sitrang-assam