வடகிழக்குப் பருவமழை தீவிரம்: காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் அபாயம்!

Tamil nadu Weather Cyclone Rain
By Vinoja Oct 21, 2026 02:14 PM GMT
Report

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது.

இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரம்: காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் அபாயம்! | Cyclone Possibility Chennai Heavy Rain Weatherman

சென்னையில் அதிகபட்சமாக எம்.ஜி.ஆர் நகரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வடபழனியில் 14 செ.மீ., சைதாப்பேட்டை மற்றும் ஆலந்தூரில் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

புயலாக வலுப்பெறுமா? 

வங்கக்கடலில் உருவாகவுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறுமா என்பது அது உருவாகும் இடத்தைப் பொறுத்தே அமையும் என வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் தொடக்கம் சிறப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரம்: காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் அபாயம்! | Cyclone Possibility Chennai Heavy Rain Weatherman

இதற்கிடையே, மழைநீர் தேங்கிய பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தியாகராய நகர் பகுதியில் வெள்ளத்தடுப்பு மற்றும் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளை அமைச்சர் ஆனந்த் ஆய்வு செய்தார்.

மேலும், முதலமைச்சர் தொடர்ந்து நிலவரங்களைக் கண்காணித்து வருவதாகவும், தேவையான நிவாரண மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.