அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்!

By Fathima Oct 11, 2021 09:30 PM GMT
Report

எதிர்வரும் 13ம் தேதி அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன்,

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யலாம்.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

மேலும் வருகிற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும் என்றும்,

வரும் 13 ஆம் தேதி அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். 

எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.