பயத்த காட்டிட்ட பரமா..! அதிதீவிர புயலாக கரையை கடந்தது மோக்கா புயல்..!

Weather
By Thahir May 14, 2023 11:44 AM GMT
Report

‘மோக்கா’ புயல் மிக அதிதீவிர புயலாக வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேச கடற்கரைகளைக் கடந்தது.

மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு 

வங்கக்கடலில் உருவான ‘மோக்கா’ புயல் தென்கிழக்கு வங்கதேசம் வடக்கு மியான்மர் இடையே கரையையை கடந்தது. இந்த புயல் கரையையை கடந்தபோது, போது 210 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது.

Cyclone Mocha made landfall as an intense storm

மேலும், இந்த அதி தீவிர மோக்கா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழந்து தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயல் இன்று கரையை கடந்துள்ள நிலையில், பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் இருந்து சுமார் 2 லட்சம் பேரும், சிட்டகாங்கில் இருந்து 1 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மழை நீடிக்கும் 

புயல் காரணமாக, வங்கதேச கடற்கரையில் கடல் அலைகள் மிகப்பெரிய உயரத்திற்கு எழும்பும். கனமழை முதல் மிக கனமழை வரை நிலச்சரிவு அபாயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, சிட்டகாங் துறைமுகமும் தற்போதைக்கு மூடப்பட்டுள்ளது.

மேலும், மோக்கா புயல் கரையை கடப்பதன் காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்குமென கணிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.