?LIVE : இன்று மாலை தீவிர புயலாக மாறுகிறது மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் இன்று காலை புயலாக வலுப்பெற்ற நிலையில் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர புயலாக மாறும் மாண்டஸ் புயல்
சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது.
எனவே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மாண்டஸ் புயல் தீவிர புயலாக உருவெடுக்கும். மாண்டஸ் தீவிர புயலாக உருவெடுக்கும் நேரத்தில் மணிக்கு 75-85 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இன்று மாலை மாண்டஸ் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை காலை வரை நீடிக்கும். தீவிர புயல் 10-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக வலுவிழக்கும்.
மாண்டஸ் புயல் மேற்கு – வட மேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.