சென்னையை புரட்டிப்போட்ட மாண்டஸ் புயல் - 350 மரங்கள் சாய்ந்தது
வங்கக்கடலில் இருந்து சென்னை வழியாக கரையை கடந்த மாண்டஸ் புயல் சென்னையில் தனத கோரமுகத்தை காட்டிச் சென்றுள்ளது.
இன்று அதிகாலை மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கடந்து சென்றது. அப்போது சென்னை, மாமல்லபுரம்,கோவம்,செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று மற்றும் கன மழை பெய்யத் தொடங்கியது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் சென்னை மெரினா கடற்கரையையும் விட்டு வைக்கவில்லை.
கனமழையால் அப்பகுதியில் உள்ள கடைகள் முழுவதும் மழை நீர் புகுந்துள்ளது.
இதுமட்டுமின்றி சூறாவளி காற்றால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
சுமார் 350க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
சாலைகளில் நடுவே கிடக்கும் மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இப்பணியில் 5000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.