சூறாவளிக்கே டஃப் கொடுத்த நபர்…அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க - வைரல் வீடியோ..!
நியூசிலாந்தை புரட்டிப்போட்ட கேப்ரியல் புயல்
சமீபத்தில் நியூசிலாந்து நாட்டை கேப்ரியல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. கேப்ரியல் புயல் காரணமாக பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அந்நாட்டு அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.
ஆக்லாந்து மற்றும் நார்த்லேண்ட்டில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாயின. இந்த கேப்ரியல் சூறாவளியின் பேரழிவில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சூறாவளிக்கே டஃப் கொடுத்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சமீபத்தில் நியூசிலாந்தில் கேப்ரியல் சூறாவளி பயங்கரமாக தாக்கியது. கேப்ரியா சூறாவளி பயங்கரமாக தாக்கிக்கொண்டிருக்கும்போது ஒருவர் வெளியே ஓடி வந்து சூறாவளியை தடுப்பது போல் ஆக்ஷன் செய்து கொண்டிருந்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் சூறாவளியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் விறுவிறுவென வீட்டிற்குள் ஓடி பதுங்கினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மனசில் ஹீரோ என்று இவருக்கு நினைப்பு என்று சிரித்துக்கொண்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
Cyclone Gabrielle is here in New Zealand
— gautam gada (@gatts4u) February 12, 2023
Rt#CycloneGabrielle #NewZealand pic.twitter.com/vIiT51qI4u