தமிழகத்தை மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - புதிய எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Tamil nadu TN Weather Cyclone
By Vidhya Senthil Nov 30, 2024 01:53 PM GMT
Report

 வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.30) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு - வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும்,

தமிழகத்தை மிரட்டும் ஃபெஞ்சல் புயல்

சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு - வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே கடக்கக்கூடும்.

மழை நீரில் தத்தளிக்கும் சென்னை ..பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை - உதயநிதி விளக்கம்!

மழை நீரில் தத்தளிக்கும் சென்னை ..பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை - உதயநிதி விளக்கம்!

அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

ஃபெஞ்சல் புயல்

ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.