புயலாக மாறிய டானா - அடுத்த 48 மணி நேரத்தில்..வானிலை அப்டேட் இதோ!

Weather Odisha Cyclone
By Vidhya Senthil Oct 23, 2024 04:40 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

புயல் எச்சரிக்கையால் ஒடிசாவில் இன்று முதல் 25ஆம் தேதி வரை 14 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 புயல் எச்சரிக்கை

 வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதே பகுதியில் நாளை புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

cyclone dana

இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (அக். 24) ஒடிசாவின் புரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே டானா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என அறிக்கையில் வானிலை ஆய்வு மண்டல அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

மீண்டும் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7.கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. இதற்குமுன் 4 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 ஒடிசா

புயலை எதிர்கொள்ள மாநில அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.

weather update

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், மேற்கு மேதினிபூர், ஜார்கிராம், பாங்குரா, ஹுக்ளி, அவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் அக். 26 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.