வங்கக்கடலில் உருவாகும் அக்வான் புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Tamil nadu Chennai Weather Cyclone
By Vinoja Nov 16, 2026 11:00 AM GMT
Report

Cyclone Aqvan Intensifies Over Bay of Bengal : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் ‘அக்வான்’ (AQVAN) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.

இந்தப் புயல் நவம்பர் 17ஆம் தேதி தீவிரப் புயலாகவும், நவம்பர் 19ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும். பின்னர் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகக் கடலோரப் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் அக்வான் புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை! | Cyclone Aqvan Intensifies Over Bay Of Bengal

மீனவர்களுக்கு எச்சரிக்கை

நவம்பர் 18 முதல் 20ஆம் தேதி வரை வங்கக்கடலில் மணிக்கு 100 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலின் உள்பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், டிசம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தில் தீவிர மழை பெய்யக்கூடும் என்றும், டிசம்பர் மாதத்தில் புயல் உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அக்டோபர் 1 முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 6 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.

கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிக மழையும், தஞ்சாவூரில் மிகக் குறைவான மழையும் பதிவாகியுள்ளது.