வங்க கடலில் உருவாகிறது அக்வான் புயல்?
Cyclone Akwan: வங்க கடலில் நவம்பர் 16ம் தேதி அக்வான் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார்.
நேற்றைய செய்தியாளர்களின் சந்திப்பின் போது, தென்கிழக்கு வங்க கடலில் நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் நவம்பர் 15ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும்.
இந்த பெயர் மேலும் வலுப்பெற்று நவம்பர் 16ல் அக்வான் புயலாக மாறலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புயலும் ஆந்திரா நோக்கியே நகர வாய்ப்புள்ளதாகவும் புயலின் நகர்வை பொறுத்து கரையை கடக்கும் இடம் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எல்நினோ தாக்கத்தால் கடல் இயல்பை விட அதிகமாக வெப்பமடையும் நிலையில் அடிக்கடி புயல் உருவாக வாய்ப்புள்ளதால் இதுபோன்ற புயல்கள் தொடர்ந்து உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.