திருட வந்த இடத்தில் நாயுடன் கொஞ்சி விளையாடிய நபர் - வாலாட்டி வழியனுப்பிய நாய் - சுவாரஸ்ய சம்பவம்!

United States of America World
By Jiyath Aug 09, 2023 04:24 PM GMT
Report

திருட வந்த இடத்தில் நாயுடன் கொஞ்சி விளையாடிய நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருடனுடன் விளையாடிய நாய்  

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்குட்பட்ட சாண்டியாகோ நகரில் ஒருவரின் வீடு ஒன்று உள்ளது. வீட்டின் கேரேஜுக்குள் சுமார் ரூ.௧ லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள சைக்கிள் ஒன்று இருந்துள்ளது. அங்கு வந்த ஒரு திருடன் அந்த சைக்கிளை திருடிக்கொண்டு வெளியே எடுத்துச் சென்றார்.

திருட வந்த இடத்தில் நாயுடன் கொஞ்சி விளையாடிய நபர் - வாலாட்டி வழியனுப்பிய நாய் - சுவாரஸ்ய சம்பவம்! | Cycle Thief Playing With Dog In Us

அப்போது கேரேஜுக்குள் இருந்த நாய் ஒன்று திருடனை நோக்கி வாலாட்டிய படியே ஓடி வந்தது. நாயை கண்டதும் சைக்கிளை நிறுத்திவிட்டு நாயுடன் கொஞ்சி விளையாட ஆரம்பித்திருக்கிறார் திருடன். அப்போது அந்த திருடன் நாயிடம் 'நான் பார்த்ததிலேயே நீ ஒரு சிறந்த நாய், ஐ லவ் யு என்று கூறி கொஞ்சி விளையாடினார்.

மேலும் 'எங்கே உனது உரிமையாளர், அவரிடம் கேரேஜை இப்படி திறந்து போடக்கூடாது என்று சொல் ' என்று நாயுடன் கொஞ்சி மகிழ்ந்துள்ளார். இறுதியில் வெளியில் நிறுத்தப்பட்ட சைக்கிளை எடுத்துக் கொண்டு திருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

வீடியோ வைரல் 

இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு வீட்டு உரிமையாளர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து போலீசார் திருடனை தேடி வருகிறார்கள்.