சைக்கிளில் காவேரிப்பாக்கம் அருகே வந்த ஆசிரியையிடம் நகை பறிப்பு
cycle-teacher-robbery
By Jon
சைக்கிளில் காவேரிப்பாக்கம் அருகே சென்ற ஆசிரியையிடம் மர்ம நபர்கள் நகையைப் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 25). இவர் தர்மதிநியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று கல்லூரி பணிகளை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பிரியதர்ஷினி அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்து சென்றனர்.
இது குறித்து காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.