தமன்னாவுக்கு சைபர் கிரைம் சம்மன் - ஐபிஎல் சட்டவிரோத ஒளிபரப்பு வழக்கு!
தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஃபேர்ப்ளே செயலி
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சட்ட விரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால்,

ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை பெற்ற தங்கள் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சைபர் கிரைமில் புகாரளித்தது.
தொடர்ந்து, ஃபேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் விசாரணை வளையத்தி்ற்குள் கொண்டுவரப்பட்டனர்.
தமன்னாவுக்கு சம்மன்
அந்த வகையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அந்த நாளில் இந்தியாவில் இல்லாததால் ஆஜராக முடியாத நி்லையில் மற்றொரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், ஏப்ரல் 29 ஆம் தேதி நடிகை தமன்னா பாட்டியாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சைபர் கிரைம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil