டாமினோஸ் பீட்சா நிறுவனத்தில் சைபர் அட்டாக்: 10 லட்சம் வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு தகவல் திருட்டு

India Cyber attack Dominos
By mohanelango Apr 20, 2021 07:25 AM GMT
Report

இந்தியாவில் பிரபல பீட்சா விற்பனை நிறுவனமான டாமினோஸ் இணையதளத்தில் ஊடுருவி ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியுள்ளது.

இந்த சைபர் தாக்குதல் குறித்து அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எங்கள் தளத்தில் இருந்து 18 கோடி ஆர்டர் தகவல்கள் திருடப்பட்டுள்ளது.

அதில் பெயர், செல்போன் எண், இமெயில், முகவரி, பீட்சாவிற்கு கட்டணத்தை செலுத்திய விவரங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது.

மேலும் 10 லட்சம் கிரெடிட் கார்டு வாடிக்கையாளரின் தரவுகளும் திருடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ரூ.4 கோடிக்கு டார்க் வெப் என்ற இணையத்தில் விற்கப்பட இருக்கிறது” என கூறியுள்ளது.

இந்த அறிவிப்பால் டோமினோஸ் தளத்தில் பீட்சா வாங்கிய வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். சைபர் தாக்குதல்கள் சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.