தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு! சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி

Vijay
By Fathima May 12, 2026 04:30 AM GMT
Report

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக சிவி சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுகவில் உள்கட்சி மோதல் வலுவடைந்தது.

தொடர் தோல்விகளால் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாக சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணியினர் திரண்டனர்.

தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு! சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி | Cv Shanmugam Will Join In Tvk

தொடர்ந்து அதிமுக குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏ-க்களும், எஸ்.பி.வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏ-க்களும் தனித்தனி அணிகளாக கடிதம் அளித்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம், சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்துள்ளது, விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என மக்கள் வாக்களித்ததை அதிமுக வரவேற்கிறது.

விஜய் தலைமையிலான ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம், திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்கலாம் என எடப்பாடி பழனிசாமி கூறினார், இதனை பலர் ஏற்க மறுத்தனர் என தெரிவித்துள்ளார்.