நயன்தாரா வேணும்; கனவை நிறைவேற்றுவாரா? - அதிமுக எம்பி பேச்சால் சர்ச்சை
அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நயன்தாரா குறித்து சி.வி.சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு
சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதைப்புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாநிலங்களவை எம்.பி சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.

இதில் பேசிய அவர், "அப்துல் காலம் கனவு காணுங்கள் என பேசினார். இவர் ஒரு படி மேலே போய் உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கேட்கிறார்.
எனக்கு நயன்தாரா வேண்டும். கனவை நிறைவேற்றுவாரா? நயன்தாராவை கல்யாணம் பண்ணி வைனு கேப்பான் இவர் கனவை நிறைவேற்றுவாரா?
ஆட்சிக்கு போன பிறகு கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என கூறுகிறார். ஐந்தாண்டுகள் என்ன செய்தார் முதல்வர்" என பேசியுள்ளார்.
பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுவதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அதிமுக எம்.பி இவ்வாறு நடிகை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.