நள்ளிரவில் மெரினாவில் பரபரப்பு; பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் திருட்டு - துரத்தி பிடித்த போலீசார்
சென்னை மெரினாவில் நள்ளிரவில் பெண்ணின் கழுத்தை அறுத்து நாகை மற்றும் பணத்தை திருடிவிட்டு கடலுக்குள் ஓடிய திருடர்களை போலீசார் சினிமா பாணியில் துரத்தி பிடித்தனர்.
பெண்ணின் கழுத்தை அறுத்திவிட்டு தப்பிய கொள்ளையர்கள்
சென்னை மெரினா கடற்கரை அருகே பட்டினபாக்கம் வரை செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் பெண் ஒருவர் ஆட்டோவில் இருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக மதுபோதையில் இருந்த 4 கேர் கொண்ட கும்பல் மழை பெய்வதால் தாங்களும் சற்று நேரம் இங்கு இருந்துவிட்டு செல்கிறோம் என்று கூறி அங்கு நின்றுள்ளனர்.
திடீரென அந்த 4 பேர கொண்ட கும்பல் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு காதில் இருந்த தங்க கம்மல், கையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்துகொண்டு தப்பியோடியுள்ளனர்.
அப்போது அந்த வழியாக எதிர்திசையில் போலீசார் வந்துள்ளனர். அந்த பெண் கூச்சலிட்ட 4 பேர் கொண்ட கும்பல் வேகமாக ஓடியதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அந்த கும்பலை துரத்தி சென்றனர்.
துரத்தி பிடித்த போலீசார்
திருட்டில் ஈடுபட்டவர்களில் 3 பேர் தப்பிய நிலையில் ஒருவர் தப்பி மெரினா கடற்கரையை நோக்கி ஓட்டம் பிடித்துள்ளார். அந்த நபரை துரத்திச் சென்ற போலீசார் கடலுக்குள் குதித்த அந்த நபரை அதிரடியாக பிடித்தனர்.
பிடிப்பட்ட அவர ஐனாவரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரிவயவந்தது. அவர் மீது கொலைமுயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
தப்பியோடிய 3 பேர் மீதும் பல்வேறு குற்றவழக்குள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
4 பேர் கொண்ட கும்பல் பெண்ணின் கழுத்தை அறுத்த நிலையில் அவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.