ஆன்லைனில் ஆர்டர் செய்த மின் வயர்.. ஷாக் கொடுத்த டெலிவரி பாய், மயங்கிய முதியவர் - என்ன நடந்தது?

Nagapattinam
By Vinothini Oct 28, 2023 10:07 AM GMT
Report

 முதியவருக்கு ஆன்லைன் ஆர்டர் மூலமாக வந்த பொருள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ஆர்டர்

நாகை மாவட்டம், வேதாரண்யம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்தில் வீட்டுக்கு தேவையான மின்சார வயரை ஆர்டர் செய்துள்ளார். அவர் அதற்கான தொகை 990 ரூபாயை செலுத்திவிட்டார்.

customer-shocked-after-getting-online-order

நேற்று அவருக்கு அந்த பொருள் வீட்டிற்கு வந்தது, பார்சலை கொடுத்துவிட்டு டெலிவரி பாய் சென்றுவிட்டார். அதனை அவர் வாங்கி வீட்டில் வைத்துவிட்டு மற்ற வேளைகளில் பிசியாக இருந்துள்ளார். அன்று இரவு வீட்டிற்கு வந்த அவர் பார்சலை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

ஹோட்டலில் தங்கிய காதல் ஜோடி.. கதவை திறந்து அதிர்ந்த நிர்வாகம் - என்ன நடந்தது?

ஹோட்டலில் தங்கிய காதல் ஜோடி.. கதவை திறந்து அதிர்ந்த நிர்வாகம் - என்ன நடந்தது?

ஆன்லைன் பொருள்

இந்நிலையில், அவர் ஆர்டர் செய்த மின் வயருக்கு பதிலாக பார்சலில் காலி மதுபாட்டில் இருந்துள்ளது. இது குறித்து பேசிய அவர், "இதுவரை தான் எத்தனையோ முறை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன். ஆனால் எப்போதும் இதுபோன்று ஆனதில்லை. தற்போது மக்களிடையே ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் மோகம் அதிகரித்து வரும் சூழலில் இப்படி ஏமாற்றுவதா?

customer-shocked-after-getting-online-order

எனக்கு வந்த பார்சலை திறந்து பார்த்து அதிர்ந்து மயங்கிவிட்டேன். நான் ஏற்கனவே ஒரு இதயநோயாளி. இப்படியா ஏமாற்றுவது? இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆன்லைன் வணிக நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.