தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை: கனிமொழி எம்.பி

tamil kanimozhi customerservice statelanguage
By Irumporai Oct 19, 2021 07:40 AM GMT
Report

அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான சேவையை மாநில மொழிகளிலும் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

"குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது.

நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.