ஆர்டர் செய்த சாப்பாட்டில் கிடந்த நத்தை - ஆத்திரத்தில் பெண் செய்த செயல்

snailinfood
By Petchi Avudaiappan Jan 04, 2022 11:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

இங்கிலாந்தில் பெண் ஒருவர் ஆர்டர் செய்த உணவில் நத்தை கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்தை சேர்ந்த க்ளோ வால்ஷா என்ற பெண் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று தனக்கும், தனது காதலருக்கும் டிப்டன்ஸ் பர்ண்ட் ட்ரீ உணவகத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

வீட்டுக்கு உணவு வந்ததும் இருவரும் சாப்பிட்டுள்ளனர். அப்போதுதான் இருவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. க்ளோவின் உணவில் ஒரு நத்தை இருந்துள்ளது. அதைக் கண்டவுடன் ஷாக்கான க்ளோ உணவை துப்பிவிட்டார். மேலும் நத்தை இருந்த உணவின் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

இந்த உணவு குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட உணவகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, உணவுக்கான முழுப் பணத்தையும் க்ளோவிடம் செலுத்திவிட்டது. தொடர்ந்து 40 பவுண்ட் மதிப்புள்ள வவுச்சரும் கொடுத்து அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்நிலையில் என்ன செய்தாலும் சாப்பாட்டில் நத்தை கிடந்ததை மறக்க முடியவில்லை எனவும், இனி அந்த உணவகத்தில் உணவு வாங்கப்போவதில்லை எனவும் க்ளோ வால்ஷா சபதம் எடுத்துள்ளார்.