பாவம் செய்துவிட்டேன்...சைவ உணவு ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த ஷாக் - ஒரே புலம்பல்!
சைவ பிரியாணியில் கிடந்த சிக்கன் துண்டால் அதனை ஆர்டர் செய்த நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சைவ உணவு
இந்த காலகட்டத்தில் உணவகத்தில் சென்று சாப்பிடுவதை விடவும் ஆன்-லைன் மூலம் ஆர்டர் செய்து உண்ணுவது வழக்கம் ஆகிவிட்டது. அதிலும் ஆன்-லைன் மூலம் வினியோகம் செய்யப்படும் பொருட்களில் சில நேரங்களில் பொருட்கள் மாற்றி வழங்கப்படுவதாக பல புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், புனேவை சேர்ந்த பங்கஜ் சுக்லா என்பவர் ஜொமோட்டோவில் சைவ உணவு ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு சிக்கன் பிரியாணி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் இதுதொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காத்திருந்த ஷாக்
அதில், புனேவின் கார்வே நகரில் உள்ள ஒரு கடையில் பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு வினியோகம் செய்யப்பட்ட அந்த பிரியாணியில் சிக்கன் துண்டு இருந்தது. நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன்.
இது என் மனதை பாதித்தது என மிக மனவேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அவரது பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ஜொமோட்டோவுக்கு எதிராக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.