இதோடு முடிச்சிப்போம்..! பண மதிப்பிழப்புக்கு எதிரான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக 58 மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,
இரு தரப்பு வாதங்கள்
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 58 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அவசரகதியில் எடுக்கப்பட்டதாகவும், உரிய ஆலோசனைகள் ஏதும் பெறாமல் எடுக்கப்பட்டுள்ளது என மனுக்களில் கூறியிருந்தனர்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அரசு தனக்கு இருக்க கூடிய அதிகாரத்தை கொண்டு தான் தேவையான அமைப்புகளிடம் உரிய ஆலோசனைகளை பெற்று தான் இந்த நடவடிக்கையை எடுத்தது. ரிசர்வ் வங்கியின் பண மதிப்பிழப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்ட பின்பு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அதிரடி தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள்
இந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வாசித்தது. தீர்ப்பை நீதிபதி கவாய் எழுதிய நிலையில், அந்த தீர்ப்பை அவரே வாசித்தார். அந்த தீர்ப்பில்,
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 58 பேர் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும், பொருளாதார ரீதியான கொள்கை முடிவு என்பதால் அதை திரும்ப பெற முடியாது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளில் குறைபாடு இருப்பதாக தெரியவில்லை.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது செல்லும் எனவும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
பொருளாதாரம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி மேற்காள்ள ரிசர்வ் வங்கி மட்டும் முடிவெடுக்க முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.
4 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பு - 1 நீதிபதி எதிர்ப்பு
பண மதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற நீதிபதி கவாயின் கருத்தில் உடன்பாடு இல்லை என நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்பிஐயின் சட்டத்தின் படி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கியே முடிவு செய்ய முடியும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்ற தீர்ப்பில் மாறுபடுகிறேன் என நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆலோசிக்காமல் பண மதிப்பிழப்பு குறித்து முடிவெடுத்திருக்கக்கூடாது - நீதிபதி நாகரத்னா
பண மதிப்பிழப்புக்கான ஒட்டுமொத்த நடவடிக்கையும் 24 மணி நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது - நீதிபதி நாகரத்னா
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக 4 நீதிபதிகளும் எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.