நாளை முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது..அதிரடியாக அறிவித்த அரசு

covid curfew government tomorrow
By Jon Mar 16, 2021 06:14 PM GMT
Report

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உத்திரபிரேதேச மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன.

பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில், நாளை முதல் போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் ஊரடங்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போதைய கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது, ஊரடங்கு விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மத்திய பிரதேசத்தின் இரு முக்கிய நகரங்களான போபால் மற்றும் இந்தூரில் ஊரடங்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு மட்டுமே விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஊரடங்கின் நேர வரம்பு குறித்து தகவல் இல்லை.