இன்று முதல் மீண்டும் ஊரடங்கு: அச்சத்தில் டெல்லி

covid curfew people delhi fear
By Jon Apr 07, 2021 09:53 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா பெரும் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், புது டெல்லியில் இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த திங்கள்கிழமை புதிதாக 3,548 பேருக்கு கொரோனா உறுதியாலி உள்ள நிலையில், 15 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கடந்த சிலவாரமாக டெல்லியில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 30 வரை இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 5.54 சதவீதமாக உயர்ந்திருப்பதும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.