தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? பிரதமருடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த பிரதமருடன் இன்று தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் மக்கள் எதிர்பார்த்து வந்த சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், டிஜிபி திரிபாதி மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருவதால், பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கட்டுப்படுகளை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து இன்று, பிரதமர் மோடியுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் கலந்து கொள்ள இருக்கிறார்.