தமிழகத்தில் மீண்டும் ஊராடங்கா? அவசரமாக நடந்த ஆலோசனைக் கூட்டம்.!

corona people lockdown tamilnadu
By Jon Mar 23, 2021 06:22 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்ததை அடுத்து மீண்டும்ஊரடங்க்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்னன் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. பாதிப்புகள் தொடர்ச்சியாக 1000-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து மருத்துவ நிபுணர்கள் உடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனாவை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு ஆகியவற்றுக்கான தேவை உள்ளதா என சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அவர் ஆலோசிப்பது தகவல் வெளியாகியுள்ளது.