ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

covid19 subramanian
By Irumporai May 13, 2021 02:50 PM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு பெற்றது. கொரோனா தடுப்பு பற்றி ஆலோசிக்க சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் 2 மணி நேரமாக நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி, ஆக்சிஜன், மருந்து பொருட்கள் விநியோகம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் முக்கியமாக முழு ஊரடங்கை தீவிரப்படுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்த கூடாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறினார்.