இந்தியாவில் ஊரடங்கு? பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அவசர ஆலேசானை மேற்கொள்ள உள்ளார்.
அச்சுறுத்தும் கொரோனா
சீனா, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா கொரோனா தொற்று குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அதிகாரிகள், தொற்று நோய் வல்லுநர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் பால் அனைவரும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
மீண்டும் ஊரடங்கு?
இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளை விமான நிலையங்களில் சோதனை நடத்த வேண்டுமா? எப்படி பட்ட சோதனை நடத்த வேண்டும்.

இந்தியாவிற்குள் கொரோனா பரவாமல் தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டுமா? என்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.