தமிழகத்தில் மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

curfew india corona
By Jon Mar 03, 2021 01:11 PM GMT
Report

தமிழ்நாட்டில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையுடன் ஊரடங்கு நிறைவடைந்த நிலையில் அதனை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள தளர்வுகள்,கட்டுப்பாடுகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்,கர்ப்பிணி பெண்கள், மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தியுள்ள அரசு, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட அரசின் கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் தெரிவித்துள்ளது‍.