அச்சுறுத்தும் டெல்டா வைரஸ்: கடுமையான ஊரடங்கு நீட்டிப்பு
Sydney
Delta virus
Curfew extention
By Petchi Avudaiappan
சிட்னியில் டெல்டா வைரஸ் அச்சுறுத்தலால் அங்கு மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸுக்கு உட்பட்ட சிட்னி நகரில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதால் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். எனினும் நாளுக்கு நாள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைக் அதிகரித்து வருகிறது.
இதனால் அங்கு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் ஜூலை 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.