தைராய்டு நோயை குணப்படுத்துவது எப்படி?
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது.
சரியான அளவில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்காவிட்டால், உடலின் இயற்கை செயல்பாட்டில் பிரச்னைகள் உருவாகும். குறிப்பாக மயக்கம், மன அழுத்தம், செரிமானக் கோளாறு, சளி, வறண்ட சருமம், உடல் எடை அதிகரிப்பு, தசை வலிமை இழப்பு, இதயத்துடிப்பு குறைதல், முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்போது மருத்துவரை கண்டிப்பாக அணுகவேண்டும்.
மேலும் உணவுமுறையில் கண்டிப்பாக கட்டுப்பாடுகள் அவசியம், இந்த நோயை குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவத்தை விளக்குகிறார் டாக்டர் கௌதமன்.