சென்னைக்கு வரும் வாட்டர் மெட்ரோ - எந்த பகுதியில்?
சென்னையில் நீர் வழி மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையில் நீர் வழி மெட்ரோ
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல், கேரள மாநிலம் கொச்சியில் நீர் வழி மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த திட்டத்தை மாதிரியாக கொண்டு, சென்னையிலும் நீர் வழி மெட்ரோவை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்ட ஆணையம்(CUMTA) ஆய்வு செய்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொது போக்குவரத்தால் ஏற்படும் மாசுவை குறைக்கும் வகையிலும், சென்னையின் ஆற்றுபகுதிகளை இணைத்து, அதில் மின்சார படகுகள் மூலம் இந்த நீர் வழி மெட்ரோ திட்டம் அமைய உள்ளது.
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை(ஈசிஆர்) முதல் நேப்பியர் பாலம் வரை 53 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த நீர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
நதிகளை சீரமைப்பது, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களோடு இணைக்கும் வகையில் படகு நிலையங்களை அமைப்பது, மின்சார படகுகளை பயன்படுத்துவது அதற்காக ஆகும் செலவுகள், உள்ளிட்டவற்றை ஆராய்ந்து விரிவான திட்ட ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.