ஆஸ்திரேலிய அணியின் புது கேப்டன் இவர் தான் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை வழிநடத்தி வந்த டிம் பெய்ன் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால், டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கடந்த வாரம் விலகினார்.
இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் டிசம்பர் 8 ஆம் தேதி தொடவங்க உள்ளதால் அதற்கு முன்னதாக புதிய கேப்டனை நியமித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் இருந்தது.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் சீனியர் ஆல் ரவுண்டரான பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
. இதன்மூலம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 47-வது கேப்டனாக அவர் பொறுப்பேற்றுள்ளார். 65 வருடங்களுக்குப் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றுள்ளார். மேலும் ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் துணைக் கேப்டனாக செயல்படுகிறார என்பது குறிப்பிடத்தக்கது.