ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம்
ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரனம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரயில் விபத்து
கடலூர், செம்மங்குப்பம் கிராமத்தில் கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு ரயில்வே கேட்டை கடந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி செல்லும் பயணிகள் ரயில் மோதி வேன் நொறுங்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
என்ன காரணம்?
இந்த விபத்து குறித்து விசாரணை குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. அதில், விபத்து நடந்த பின்னர், பங்கஜ் சர்மா ஸ்டேஷன் மாஸ்டரை தொடர்புகொண்டு,
கேட்டை மூடவில்லை என்பதை ஒப்புக்கொண்டது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டு, பங்கஜ் சர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.