பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை திடீர் சோதனை!
                                    
                    Tamil nadu
                
                                                
                    Cuddalore
                
                        
        
            
                
                By Sumathi
            
            
                
                
            
        
    பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரெய்டு
கடலூரில், கே.வி.டெக்ஸ் எனும் பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நாள்தோறும் ஏராள வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்தக் கடையின் மீது வரி ஏய்ப்பு புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், சென்னையில் இருந்து 15 வருமான வரித்துறை அதிகாரிகள் கடலூர் சென்றுள்ளனர். மேலும், தீவிர சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.