91 ஆண்டுகளுக்கு பின்னர் கடலூரில் கனமழை
கடலூரில் 91 ஆண்டுகளுக்கு பின்னர் பிப்ரவரி மாதத்தில் ஒரே நாளில் 19 செமீ கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடலூரில் ஒரே நாளில் மழை பெய்து கொட்டித் தீர்த்தது, இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் பெய்த மழையானது புதிய வரலாற்று சாதனையாக பதிவாகி உள்ளது.
கடந்த 9.2.1930 அன்று கடலூரில் 11.9 சென்டி மீட்டர் மழை பெய்ததே பிப்ரவரி மாதத்தில் பெய்த அதிகபட்ச மழையாக இருந்தது.
ஆனால் 91 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விடிய, விடிய பெய்த கனமழை, முந்தைய சாதனையை முறியடித்தது.
கடலூரில் ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை என்பது கடுமையான மழை பொழிவாகும் என தெரிவித்துள்ளார்.