கடலூரில் பரவும் விஷ காய்ச்சல்... - சிகிச்சைக்காக அலைமோதும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம்
கடலூரில் விஷ காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மக்களை தாக்கும் விஷக்காய்ச்சல்
கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விஷக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷக்காய்ச்சலால் கடலூர் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சலால் தாக்கப்பட்டுள்ளனர். விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் உடல் வலி ஏற்படுவதுடன் சளி, இருமலும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் பரவியதால் பொதுமக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர்.