தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த குழந்தை - பரிதாபமாக உயிரிழப்பு
தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
இரட்டை குழந்தை
கடலூர் மாவட்டம் வடலூர் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் சூர்யா- சினேகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகள் ஊசிமணி, பாசிமணி விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ள நிலையில், கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது.
குழந்தை உயிரிழப்பு
இந்நிலையில் பெண் குழந்தையான மைதிலி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அடுப்பு பற்ற வைப்பதற்காக வைத்திருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.