Cucumber Rice: வெறும் 10 நிமிடங்களில் ருசியான வெள்ளரிக்காய் சாதம்
அதிகளவு நீர்ச்சத்தும், குறைந்த கலோரியும் கொண்டது வெள்ளரிக்காய், கோடைக்காலத்துக்கு ஏற்ற வெள்ளரிக்காய் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, சருமத்துக்கு நல்லது, சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது, விட்டமின்கள் கே, சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
இதனை கொண்டு சாதம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய்- 2
வேக வைத்த சாதம்- 2 கப்
பெரிய வெங்காயம் - 1
நெய்- 2 டீஸ்பூன்
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்- 2
இஞ்சி, பச்சை மிளகாய்- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
இதனுடன் இஞ்சி, கறிவேப்பிலை, மிளகாய், பெருங்காய பவுடர் சேர்க்கவும்.
அடுத்ததாக துருவிய தேங்காய், வெள்ளரிக்காயை சேர்த்து கிளறிவிடவும்.
கடைசியாக இந்த கலவையில் வேக வைத்த அரிசி சேர்த்தால் சுவையான வெள்ளரிக்காய் சாதம் தயார்!!!
