இந்த கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது - தவெக உறுதி
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
SIRக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை(SIR) இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

இந்த SIR பணிக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், SIR படிவம் தவெக தோழர்களுக்கு வழங்கப்படுவதில்லை, பதிவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில், SIR க்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தவெக பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒரு போதும் கூட்டணி கிடையாது
மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தவெக இணை செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமாரிடம், பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரு வாரியான வெற்றி பெற்றுள்ளது அந்த கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், பாஜக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஒரு போதும் தவெக கூட்டணி அமைக்காது.
விஜய் தான் எங்கள் முதல்வர் வேட்பாளர். தவெக தலைமையை ஏற்று வரும் கட்சிகளை கூட்டணிக்கு வரவேற்போம்" என கூறினார்.
Ethirneechal: பதிவு செய்யப்பட்ட அன்பு தர்ஷன் திருமணம்.... கேள்விக்குறியாகிய பார்கவி வாழ்க்கை Manithan