பாஜகவை ராஜினாமா செய்த சி.டி.ஆர். நிர்மல் குமார் - வரவேற்ற அதிமுக...காரணம் என்ன?

ADMK AIADMK BJP K. Annamalai Edappadi K. Palaniswami
By Thahir Mar 05, 2023 12:26 PM GMT
Report

பாஜகவில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்து வந்த சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்.

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

வேதனை அடைந்தது தான் மிச்சம்

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநுாறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது.

சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ctr-nirmal-kumar-joined-aiadmk

இதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்.