தந்தை மறைவு .. சோகத்தில்அஜித் : நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு, சக நடிகரான விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
அஜித் தந்தை மறைவு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இன்று காலமானர். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , சென்னையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 3:15 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
விஜய் ஆறுதல்
இந்த நிலையில் . அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் சக நடிகரான விஜய், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு நேரில் சென்று தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். முன்னதாக அஜித் தந்தை உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.